போலீசாருக்கு மிரட்டல் விடுத்த அதிமுக எம்எல்ஏ மீது திமுகவினர் புகார்

DMK ADMK Complaint MLA Against Files
By Thahir Dec 10, 2021 08:46 AM GMT
Report

காவல்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த அ.தி.மு.க எம்எல்ஏ பிஆர்ஜி.அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தி.மு.கவினர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

கடந்த 7.12.2021 செவ்வாய்க்கிழமை அன்று கோவை - அவினாசி சாலை, அண்ணா சிலை அருகே உள்ள கோவை மாவட்ட அ.இ.அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில்,

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் காவல்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் விதத்திலும் பேசியிருந்தார்.

இதனை கண்டித்து கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் அவர்களின் ஆலோசனையின் பேரில்,

கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் அரசூர் பூபதி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சுரேஷ், சரவணம்பட்டி பகுதி பொறுப்பாளர் சிவா (எ) பழனிச்சாமி, வார்டு செயலாளர் கதிர்வேல்,

மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் நவீன்பிரபு, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பாபு உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் E3 சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் மனு அளித்தனர். இந்த புகாரை பெற்ற காவல்துறை ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.