திமுகவால் சாதிக்கு அப்பாற்பட்டு ஒரு தொகுதியிலாவது வேட்பாளர்களை நிறுத்த முடியுமா ? - குஷ்பூ

dmk bjp khushboo
By Jon Mar 07, 2021 07:28 AM GMT
Report

காங்கிரஸ் மற்றும் திமுகவால், சாதிக்கு அப்பாற்பட்டு ஒரு தொகுதியிலாவது வேட்பாளர்களை நிறுத்த முடியுமா என நடிகை குஷ்பூ கேள்வி எழுப்பியிருக்கிறார். சென்னையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், பாஜக சார்பில் 'வெற்றி கொடி ஏந்தி தமிழகம்' என்ற பரப்புரை பயணத்தை தமிழக பாஜக நிர்வாகியும் சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான குஷ்பு மற்றும் தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாதவரம் தொகுதி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆயிரம் பேர் பாஜகவில் இணைந்தார்கள். பின்னர், பாஜக நிர்வாகிகளுடன் பேரணியாக சென்ற நடிகை குஷ்பூ, அதிமுக - பாஜக கூட்டணிக்கு வாக்கு சேகரித்தார்.

திமுகவால் சாதிக்கு அப்பாற்பட்டு ஒரு தொகுதியிலாவது வேட்பாளர்களை நிறுத்த முடியுமா ? - குஷ்பூ | Dmk Field Candidates Constituency Caste Khushboo

அப்போது குஷ்பு பேசுகையில், அவர் ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சி, ஆறு ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்களையாவது சொல்ல முடியுமா? அவர் காங்கிரஸ் மற்றும் திமுகவால், சாதிக்கு அப்பாற்பட்டு, ஒரு தொகுதியிலாவது வேட்பாளர்களை நிறுத்த முடியுமா என நடிகை குஷ்பூ கேள்வி எழுப்பியிருக்கிறார்.