திரையரங்கில் பாப்கார்ன் கேட்டு தகராறு - திமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு !

DMK Tamil Nadu Police
By Thahir Jul 04, 2023 09:05 AM GMT
Report

மாமன்னன் திரைப்படம் பார்க்க சென்ற திமுக நிர்வாகிகள் திரையரங்கில் பாப்கார்ன் கேட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாமன்னன் பார்க்க சென்ற திமுக நிர்வாகிகள்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கடந்த 29ஆம் தேதி வெளிவந்தது மாமன்னன் திரைப்படம்.

இந்த திரைப்படத்தை சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் அமைச்சர் உதயநிதி நடித்துள்ளதால் திமுக-வினர் பலரும் படத்தை கண்டு கழித்து வருகின்றனர்.

இதனை அடுத்து அமைச்சர் கீதா ஜீவன் பெயரை பயன்படுத்தி தி.மு.க. பகுதி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் திமுக நிர்வாகி வில்சன் ஆகியோர் தலைமையிலான தி.மு.க.வினர் தூத்துக்குடிபாலகிருஷ்ணா திரையரங்கிற்கு மாமன்னன் திரைப்படத்தை பார்க்க சென்றுள்ளனர்.  

பாப்கார்ன் கேட்டு தகராறு 

இந்நிலையில் படத்தை பார்க்க சென்ற திமுக நிர்வாகிகள் டிக்கெட் எடுக்காமல் படத்தை பார்த்தது மட்டுமில்லாமல் இடைவேளையின்போது பணம் ஏதும் கொடுக்காமல் பாப்கார்ன் கேட்டு திரையரங்கு உரிமையாளர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

dmk executives had an argument in the theater

தகவல் அறிந்த மத்திய பாகம் போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அப்போது திமுக நிர்வாகிகள் போலீஸாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் திமுக நிர்வாகி வில்சன் ஆகியோர் மீது திரையரங்கில் தகராறில் ஈடுபட்டதாகவும், மத்திய பாகம் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவதூறான வார்த்தைகளை பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், சிசிடிவி காட்சிகள், வீடியோ பதிவுகள் ஆகியவற்றைக் கொண்டு மற்ற திமுக நிர்வாகிகளையும் வழக்கில் சேர்க்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.