₹ - இதை வடிவமைத்தது திமுக முன்னாள் எம்எல்ஏ-வின் மகன் என்பது தெரியுமா?

By Fathima Mar 14, 2025 04:40 AM GMT
Report

2025- 26ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்-டை தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில் நேற்று தமிழக முதலமைச்சர் எ்க்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவில், ₹ என்பதற்கு பதிலாக ரூ என்று இடம்பெற்றிருந்தது.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது, இந்நிலையில் ₹ வடிவமைத்தவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

₹ - இதை வடிவமைத்தது திமுக முன்னாள் எம்எல்ஏ-வின் மகன் என்பது தெரியுமா? | Dmk Ex Mla Son Designed Indian Rupee Logo

2010ம் ஆண்டு வெளியான ₹ லட்சினையை உதயகுமார் தர்மலிங்கம் என்பவர் வடிவமைத்திருந்தார்.

ஐஐடி கவுகாத்தியில் பேராசிரியராக பணியாற்றி வரும் உதயகுமார் தர்மலிங்கம், திமுக முன்னாள் எம்எல்ஏ-வின் மகன் ஆவார்.

தர்மலிங்கம் ரிஷிவந்தியம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார், மத்திய நிதித்துறை அமைச்சகம் நடத்திய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் உதயகுமார்.