திமுக முன்னாள் அமைச்சர் மகனின் உதவியாளருக்கு 7 ஆண்டு சிறை
போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.சி.மணி மகனின் உதவியாளர் லியாகத் அலிக்கு உயர்நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இறக்குமதியில் கோடிக்கணக்காண ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மறைந்த திமுக அமைச்சர் கே.சி.மணியின் மகன் மணி அன்பழகனின் நெருங்கிய உதவியாளரும், இறக்குமதியாளருமான கே.லியாகத் அலி, அமலாக்க இயக்குனரகம் தொடுத்த பணமோசடி வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மகனின் உதவியாளருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.