தேர்தல் நடத்தை விதிமுறைகளை திமுகவினர் கடைபிடிப்பதில்லை : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஆளுங்கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னால் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை நேரடியாக சந்திக்காமல், காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்து வருவதாகவும் விமர்சனம் செய்தார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஆளுங்கட்சியினர் முறையாக பின்பற்றாவிட்டால், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தில் அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவர் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார். மேலும், அதிமுக சார்பில் போட்டியிடும் அனைவரும் வெற்றி பெறுவார்கள் என அவர் தெரிவித்தார்.