ஈரோடு இடைத்தேர்தல் - திமுக தேர்தல் பணிமனைக்கு சீல் வைப்பு

DMK Erode
By Thahir Feb 16, 2023 05:42 AM GMT
Report

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக தேர்தல் பணிமனைக்கு சீல் வைத்து தேர்தல் நடத்தும் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சியினரும் பணிமனை அமைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணிமனைக்கு சீல் 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த திமுக தேர்தல் பணிமனைக்கு சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கல்லுக்கடை ராஜாஜி வீதியில் செயல்பட்டு வந்த திமுக தேர்தல் பணிமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

DMK election office sealed

அனுமதியின்றியும் தேர்தல் பணிமனை செயல்பட்டதாகவும், தேர்தல் விதிகளை மீறியதாக கூறி, திமுக தேர்தல் பணிமனைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும், 14 இடங்களில் அனுமதியின்றி பணிமனைகள் செயல்படுவதாக கூறி சீல் வைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.