சென்னைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியானது

Chennai
By Fathima Apr 19, 2026 07:46 AM GMT
Report

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் சென்னை சூப்பர் 6 எனும் திராவிட மாடல் 2.0 வாக்குறுதிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டார்.

அதிலுள்ள முக்கியமான அம்சங்கள்

* சென்னையில் 1000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசலை குறைத்து பயண நேரத்தை 25 சதவிகிதம் வரை சேமிக்க AI தொழில்நுட்பத்தில் இயங்கும் போக்குவரத்து மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படும்.

* விலங்குகள் பிறப்புக்கட்டுப்பாட்டு திட்டத்தின் ABC கீழ் கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்கப்படும்.

* அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் அதி ஒளி தெருவிளக்குகள் அமைக்கப்படும்.

சென்னைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியானது | Dmk Election Manifesto For Chennai Released

* கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென ஒரு தனித்துவ உலகத்தர பண்பாட்டு மையம் அமைக்கப்படும்.

* மெட்ரோ விரிவாக்கப் பணிகள் 2028ல் முடிக்கப்படும்.

* மழைநீர் வடிகால்கள் 2028க்குள் முடிக்கப்படும்.

* 10,000 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு

* 20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள்