தொகுதி யாருக்கு? தயார் நிலையில் திமுக வேட்பாளர்கள் பட்டியல்
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி ,மதிமுக ,கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில், காங்கிரஸ் கட்சிக்கு 25 ,மதிமுக, விசிக ,கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் திமுக சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளார்.