வாக்கு சேகரிக்க ஸ்டாலின் போல வந்தவர் ; காஞ்சிபுரம் MLA வைரல் குத்தாட்டம்
வாக்காளர்கள் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேடமிட்ட நபரை கண்டு பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.
திருப்பத்தூர் நகராட்சியில் 1 ஆவது வார்டில் திமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் குப்பாம்மாள் இரட்டைமலை சீனிவாசன் தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில்
திமுகவினர் மற்றும் ஊர் மக்களுடன் வீடுவீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.
அவருக்கு ஆதரவாக திரளான திமுகவினர் மற்றும் 1 வார்டு இளைஞர்களும் வீடுவீடாக சென்று திமுக சின்னத்திற்கு தீவிரமாக வாக்குகளை சேகரித்தனர்.
அப்பொழுது திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேடமிட்ட நபரும் வேட்பாளர் குப்பாம்பாளுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போன்று தோற்றம் கொண்டிருந்த நபர் வாக்கு சேகரித்தார் அப்போது வாக்காளர்கள் ஆச்சரியத்துடன் நம்ம வீட்டுக்கு முதலமைச்சர் வந்திருக்காரா? என்று வியப்புடன் பார்த்தனர்.
மேலும் அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேடம் போட்டிருந்த நபருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.