கல்வியை வியாபாரமாக மாற்றியது திமுகவா? அதிமுகவா?
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் கல்வியை வியாபாரமாக மாற்றியது அதிமுகவா? திமுகவா? என்ற விவாதம் நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டதால், அனைத்து கட்சிகளிலும் கூட்டணியைப் பற்றிய பேச்சு துவங்கிவிட்டது.
ஒரு சில முக்கிய கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தையும் துவங்கிவிட்டன. இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஒரு மாறுபட்ட விவாத நிகழ்ச்சியை ஐபிசி தமிழ் தொகுத்து வழங்கி வருகிறது.
அந்த வகையில், இன்று கல்வியை வியாபாராமாக்கியது திமுகாவா? அதிமுகாவா? என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதிமுக சார்பில் குறளார் கோபிநாதனும், திமுக சார்பில், வழக்கறிஞரான கண்ணதாசன் இருவரும் கலந்து கொண்டு பேசினர்.