திமுகவுக்கு எப்போதும் பொட்டி வாங்கித் தான் பழக்கமுள்ளது : முதல்வர் கடும் தாக்கு!

people admk palanisamy
By Jon Feb 18, 2021 12:11 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த பிரச்சாரத்தில் பேசும்போது, திமுகவுக்கு பொட்டி வாங்கித் தான் பழக்கமுள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து முதல்வர் பிரச்சாரத்தில் பேசுகையில், ”திமுகவுக்கு பொட்டி வாங்கித் தான் பழக்கமுள்ளது. பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கி அதை பெட்டியில் போட்டு வீட்டுக்கு கொண்டு செல்கிறேன் என்று சொல்வார் மு.க ஸ்டாலின். முதல்வரானதும் அந்த மனுக்களை எல்லாம் நிறைவேற்றுகிறேன் என்பார். எத்தனை முறை திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.

அப்போதெல்லாம் மக்களை பார்க்கவில்லை. ஆட்சியில் இருந்த போது திமுக நாட்டு மக்களை மறந்து விட்டதால், இப்போது நாட்டு மக்கள் திமுகவை மறந்து விட்டார்கள். திமுக ஆட்சிக் காலத்திலேயே மக்களின் பிரச்னையை தீர்த்து இருக்கலாம். ஆனால், அப்போதெல்லாம் அதனை செய்யவில்லை. 2019ம் ஆண்டே மக்களின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை அதிமுக அரசு தொடங்கி விட்டது. மக்களிடம் இருந்து பெறப்பட்ட 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது.  

திமுகவுக்கு எப்போதும் பொட்டி வாங்கித் தான் பழக்கமுள்ளது : முதல்வர் கடும் தாக்கு! | Dmk Edappadi Money Election

மேலும் திமுக மக்களை ஏமாற்றி நாடகம் ஆடுவதெல்லாம் எடுபடாது. மக்களின் குறைதீர்க்கவே 1100 புகார் எண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த படியே அந்த எண்ணில் மக்கள் புகாரளிக்கலாம்” என்றார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் போர்க்கால அடிப்படையில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மக்களிடமிருந்து மனுக்களை வாங்கி வருகிறார். அதை விமர்சித்து முதல்வர் தற்போது விமர்சனம் செய்துள்ளார்.