திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

DMK Durai Murugan
By Yashini Oct 10, 2026 07:07 AM GMT
Report

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

துரைமுருகன் திமுகவின் முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவர்.

அண்ணா, கருணாநிதி, க.அன்பழகன் ஆகியோரைத் தொடர்ந்து கட்சியின் நான்காவது பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார்.

தமிழகத்தில் நீண்டகாலமாக எம்எல்ஏவாக இருந்த மூத்த அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி | Dmk Duraimurugan Admitted To Hospital

கடந்த சில ஆண்டுகளாக துரைமுருகன் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும், கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அண்மையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவிலும் பங்கேற்று உரையாற்றினார்.

இந்நிலையில், துரைமுருகன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதயநோய் காரணமாக அவர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.