ஒரு வாரத்தில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை - திமுக பரபரப்பு அறிக்கை !!
2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடை பெற உள்ளது. இது குறித்து கலந்தாலோசித்திட கழக வேட்பாளர்கள் - மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
"கழக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி, ஜூன் 4-ம் தேதி அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து கலந்தாலோசித்திட, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில்,
மாவட்டக் கழகச் செயலாளர்கள்-கழக வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் வருகிற 1-6-2024 காலை 11 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
இக்கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்குவார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் - கழக வேட்பாளர்கள் - தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்.
— DMK (@arivalayam) May 28, 2024
- பொதுச்செயலாளர் திரு துரைமுருகன் அவர்கள் அறிவிப்பு. pic.twitter.com/ypNw6JBQFN
அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்