நாங்க பாத்துகிட்டுதான் இருக்கோம்..தி.மு.க. தான் அறிவாளியான கட்சியா? : கொந்தளித்த தலைமை நீதிபதி ரமணா
திமுக தன்னை அறிவாளி என நினைக்க வேண்டாம் என சுப்ரீம் கோர்டு தலைமை நீதிபதி என்.வி ரமணா பரபரப்பு கருத்தினை தெரிவித்துள்ளார்.
இலவச திட்டங்கள்
இலவச திட்டங்களை முறைப்படுத்தக்கோரி அஸ்வினி குமார் உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்த பொதுநல மனுவை சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போதுஇலவச திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை திவால் நிலைக்கு இட்டுச்செல்லும் என மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது மத்திய அரசின் சார்பிலும் இதே வாதம் முன்வைக்கப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி, என்.வி ரமணா தேர்தலின் போது இலவச வாக்குறுதிகளை அளிக்கவேண்டாம் என கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எப்படி உத்தரவிட முடியும் என்ற கேள்வியை முன்வைத்தார். மேலும், இது குறித்து மத்திய அரசு கூறும்போது, போலியான இலவச அறிவிப்புகள் பொருளாதாரத்தை சீரழிக்கின்றன என்று தெரிவித்தது.
அறிவாளியா திமுக
அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடும்போது, தலைமை நீதிபதி கடும் கோபத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி என்ற முறையில் என்னால் எதுவும் கூற முடியவில்லை. ஆனால் உங்கள் கட்சி நடந்துகொண்ட விதம் மற்றும் உங்கள் அமைச்சர் பேசும் விதத்தை நாங்கள் கண்டும் காணாதது போல் இருக்கிறோம் என்று நினைக்க வேண்டாம்.

அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருக்கிறோம். உங்கள் கட்சி மற்றும் அறிவாளித்தனமாக செயல்படுகிறது என நினைக்கவேண்டாம் என கடும் கோபமாக தனது கருத்தினை முன் வைத்தார்.
CJI: Mr Wilson, The party you represent (DMK) ... i have a lot of things to say. Dont think you are the only wise party appearing. Dont think we are ignoring all that is being said just because we are not saying anything#freebies
— Bar & Bench (@barandbench) August 23, 2022
தேர்தல் வாக்குறுதியில் இலவச திட்டங்கள் குறித்து விசாரணை பரபரப்பை எட்டியிருக்கும் நிலையில் , தமிழகத்தின் ஆளும் கட்சியினை தலைமை நீதிபதி தனது வாய்மொழி கருத்துக்களால் விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புத்தர் சிலை விவகாரம் - வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட அநுர அரசு: சுமந்திரன் கடும் சீற்றம் IBC Tamil