கட்சி அலுவலகம் முன்பு நின்றுக்கொண்டிருந்த ‘திமுக' வட்ட செயலாளர் வெட்டி படுகொலை - அதிர்ச்சி சம்பவம்
சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் ரியல் எஸ்டேட் செய்து வந்தார். செல்வம் அப்பகுதியின் திமுக வட்டச் செயலாளராகவும் உள்ளார். விரைவில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 188வது வட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டிருந்தார். இதர வார்டுகளில் சீட் வழங்குவதில், செல்வம் தலையீடு அதிகம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், செல்வம் நேற்று இரவு மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த போது, இவருக்கு சால்வை அணிவிப்பது போல வந்த 6 பேர் கும்பல், சரமாரியாக இவரை வெட்டி வீழ்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த செல்வத்தை மீட்டு அங்கிருந்தவர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் உயிரிழ்ந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த படுகொலை தொழில் போட்டியால் நடத்தப்பட்டதா அல்லது அரசியல் காரணங்களாக நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
சமீபத்தில் முன்பு தான் திருநெல்வேலி மாநகர 38வது வார்டு திமுக செயலாளராக உள்ள பொன்னு தாஸ் என்ற அபே மணி இரவு 11 மணியளவில் பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் அருகிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.