டிசம்பர் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு
டிசம்பர் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின அவர்கள் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 01-12-2022 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.

அப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் நுாற்றாண்டு நிறைவு விழா குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்"
— DMK (@arivalayam) November 23, 2022
- பொதுச்செயலாளர் திரு. துரைமுருகன் அவர்கள் அறிவிப்பு.
நாள்: 01-12-2022 காலை 10.30 மணிக்கு
இடம்: கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலயம், சென்னை#DMK pic.twitter.com/9FUtZDid11
எதிர்கட்சி காட்டுகின்ற இந்த பூச்சாண்டி வேலைகளை மக்கள் நம்பப் போவதில்லை: பிரபு எம்.பி சாடல் IBC Tamil