திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. தேதியை அறிவித்தார் துரைமுருகன்
திமுக மாவட்ட செயலாளர்களுக்கான கூட்டம் நடைபெறும் தேதியை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் பொதுமக்களிடையே ஆட்சி குறித்த ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி ஆகிய தேர்தல்களில் முத்திரை பதித்துள்ள மு.க.ஸ்டாலின் அடுத்து என்ன செய்யவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் உள்ளது.
இந்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்களுக்கான கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள்கள் கூட்டம் வருகிற 28-05-2022 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில்சென்னை அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கத்தில்" வைத்து நடைபெறும்.
அப்போது மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.