திண்டுக்கல் லியோனி பதவியேற்பதை கண்டு கண்ணீர் விட்ட மனைவி!
Dindigul I. Leoni
By Thahir
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி பதவியேற்பின் போது அவரது மனைவி ஆனந்த கண்ணீர் விடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக பாடநுால் கழக தலைவராக திண்டுக்கல் லியோனியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.இந்நிலையில்
தமிழக பள்ளிக் கல்வி இயக்குனரக டி.பி.ஐ வளாகத்தில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி
பொறுப்பேற்று கொண்டார்.உடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இருக்கையில் அமர வைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.இதனையடுத்து
அதைக்கண்ட திண்டுக்கல் லியோனி மனைவி ஆனந்த கண்ணீர் விட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.