திமுக முதல் முதலாக வென்று ஆட்சி பிடித்த நாள் இன்று - முதல்வர் ட்விட்டரில் பெருமிதம்
திமுக முதன் முதலாக வென்று ஆட்சியைப் பிடித்த நாள் இன்று என பெருமிதத்தோடு மு.க ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் காங்கிரஸ் தொடர் வெற்றிக்கு பிறகு திராவிட இயக்கத்தில் இருந்து மக்களுக்கான அரசியல் பணியை முழுமையாக செய்திட உருவான திராவிட முன்னேற்ற கழகம்
அண்ணாதுரை மூலம் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து வெற்றியும் பெற்று ஆட்சியைப் பிடித்தது.
1967-ல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது.
1967 மார்ச் 6-ல் அக்கட்சிப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல்வரானார்.
இந்த நினைவுகளை எத்தனை சோதனைகள் - அடக்குமுறைகள் - அவதூறுகள்! அத்தனையும் கடந்து தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு எத்தனை எத்தனை சாதனைகள்! என தமிழக முதல்வரும் திமுக கட்சித் தலைவருமான ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
”இந்தியத் தேர்தல் வரலாற்றில் மாநிலக் கட்சி முதன்முதலாக ஆட்சி அமைத்த நாள். இதே நாளில் மீண்டும் திமுக ஆட்சி அமைய சூளுரைப்போம்” என ஸ்டாலின் சென்ற ஆண்டு முகநூலில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.