திமுக - சிபிஎம் இடையே தேர்தல் உடன்படிக்கை கையெழுத்து - எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதி விரைவில் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை முடித்துவிடும் முனைப்பில் திமுக மற்றும் அதிமுக ஈடுபட்டு வருகிறது. திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தேர்தல் உடன்படிக்கை கையெழுத்தானது.
ஆனால் சிபிஎம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தற்போது திமுக - சிபிஎம் இடையே தேர்தல் உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்னன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அதன்படி திமுக கூடடணியில் 6 சட்டமன்ற இடங்களில் சிபிஎம் போட்டியிட இருக்கிறது. இவை எந்தெந்த தொகுதிகள் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.