முதலமைச்சர் படம் முன்பு மது பாட்டிலுடன் பாட்டு பாடிய திமுக கவுன்சிலர் : வைரலாகும் புகைப்படம்
முதல்வர் மு. க. ஸ்டாலின் படத்திற்கு இரண்டு பக்கங்களிலும் மது பாட்டில்களை வைத்து, ஸ்டாலின் தான் வாராறு.. விடியல் தரப்போராறு பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டு, மது போதையில் திமுக கவுன்சிலர் போட்ட குத்தாட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கையில் பாட்டிலுடன் கவுன்சிலர்
கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி அடுத்த அண்ணா கிராமம் ஒன்றிய திமுக கவுன்சிலர் குமரகுரு. திமுக கொடி கட்டிய காரில் இவர் தனது நண்பர்களுடன் பயணம் செய்திருக்கிறார்.
அப்போது, கார் முன் இருக்கையில் அமர்ந்திருந்த குமரகுரு, கையில் மது பாட்டில்களுடன் உற்சாகமாக பாட்டு பாடிய படியே சென்று இருக்கிறார்
சட்டமன்ற தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட, ஸ்டாலின் தான் வாராறு விடியல் தரப் போறாரு என்ற பாடல் காருக்குள்ளே பின்னணியில் ஒலிக்க, காரில் உள்ள முதல்வர் ஸ்டாலின் படத்தில் இருபுறமும் மது பாட்டிலை கோப்பையில் வைத்து, உற்சாகமாக குமரகுரு கோரஸ் பாடுகிறார்.
வைரலாகும் புகைப்படங்கள்
பின்னர் நண்பர்களுடன் காரில் இருந்து இறங்கி மது அருந்தியடியே குத்தாட்டம் போடுகிறார். இதை அவருடன் சென்றிருந்த நண்பர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி பண்ருட்டி பகுதியில் மற்றும் அண்ணா கிராமம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மது ஒழிப்பை தனது கொள்கையாக கூறி வரும் திமுகவினரிடையே இந்த வீடியோ சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது