திமுக ஊழல் பட்டியல் நாளை வெளியீடு : வீடியோ வெளியிட்ட அண்ணாமலை
திமுக ஊழல் பட்டியல் நாளை வெளியிடப்படும் என அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை வீடியோ
திமுக ஊழல் பட்டியல் நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடப்படும் என தமிழக பாஜக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், அண்ணாமலையின் வாட்ச் பில் கேட்டிருந்த நிலையில், அண்ணாமலை ஏப்ரல் 14-ந் தேதி தி.மு.க.வை சேர்ந்த 27 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தற்போதைய அமைச்சர்கள் என அவர்களின் சொத்து மதிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

வீடியோ வெளியீடு
அதேபோல், ஏப்ரல் 14-ந் தேதியே அண்ணாமலையின் வாட்ச் பில் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோ தமிழ்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
DMK Files
— K.Annamalai (@annamalai_k) April 13, 2023
April 14th, 2023 - 10:15 am pic.twitter.com/4Hlvq4l2G0