முடிந்தது பஞ்சாயத்து - இன்று திமுக- காங்கிரஸ் தொகுதி பங்கீடு கையெழுத்தாகிறது!

election dmk congress talk
By Jon Mar 07, 2021 07:00 AM GMT
Report

திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. திமுக 20 தொகுதிகள் வரை கொடுக்க தயாராக இருப்பதாக கூறப்பட்டது . ஆனால், காங்கிரஸ் 30க்கும் மேல் தொகுதிகளை கேட்டதாகவும் திமுக 23 தொகுதிகள் மட்டுமே கொடுப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியாகின.

திமுக வின் இந்த செயல் வருத்தம் அளிப்பதாக உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் திமுக கூட்டணியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதிமய்யம் நேரடியாகவே அழைப்பு அனுப்பியது. இதனால் தமிழகத்தில் மூன்றாவது அணியில் காங்கிரஸ் இணையலாம் என பரபரப்பாக அரசியல் வட்டாரத்தில் பேசபட்டது.

இந்த சூழலில் காங்கிரஸ் நிர்வாகிகளான தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் நேற்று இரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு 24 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி, ஒரு ராஜ்யசபா வழங்குவது என முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் உறுதியான தொகுதிகள் ஒதுக்கீடு ஒப்பந்தம் நடைபெறவில்லை. ஸ்டாலினை சந்தித்த பிறகு வெளியே வந்த நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், இன்று காலை 10 மணிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறினார். இதனால் நீண்ட நாட்களாக இழு பறியாக இருந்த திமுக- காங்கிரஸ் இடையேநிலவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கபட்டது என்றே கருதலாம்.