DMK - Congress கூட்டணி உடைவது யாருக்கு நல்லது?

Indian National Congress DMK
By Fathima Feb 12, 2026 08:55 AM GMT
Report

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக- காங்கிரஸ் இடையேயான கூட்டணி தொடர்பில் இதுவரையிலும் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இரு கட்சிகளுக்கும் இடையே குழப்பம் நிலவி வருவதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமற்ற ஒன்று என தெரிவித்தார்.

மேலும் 22ம் தேதி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கும் என திமுக தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பேட்டியளித்துள்ள மூத்த பத்திரிக்கையாளர் மணி, திமுக- காங்கிரஸ் கடந்த 22 ஆண்டுகளில் 4 சட்டப்பேரவை தேர்தல், 4 நாடாளுமன்ற தேர்தல் என மொத்தம் 8 தேர்தல்களை இணைந்தே சந்தித்துள்ளனர்.

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் கடந்த 2 மாதங்களாக நெருடல் இருந்தது, முதல்கட்ட பேச்சுவார்த்தையின் போதே காங்கிரஸ் 70 தொகுதிகள் என பேசியதே திமுக-வின் தாமதத்துக்கு காரணமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.