நாடாளுமன்ற தேர்தல் - திமுக காங்கிரஸ் - பொங்கலுக்கு பின் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை..?
வரும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் கணக்குகளில் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல்
வரும் 2024-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டிலுள்ள கட்சிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. இதில் இந்தியா கூட்டணியில் பாஜகவை எதிர்க்கும் பல மாநில, தேசிய கட்சிகளும் இடமபெற்றுள்ளன.
தமிழகத்தை பொறுத்தமட்டில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக, பாஜக, நாம் தமிழர் போன்ற கட்சிகளும் களத்தில் உள்ளன.
கூட்டணி பேச்சுவார்த்தை
இதில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு எவ்வாறு முரண்பாடுகள் இல்லாமல் தொகுதி பங்கீடு செய்யபயோகிறது என்று தான் கேள்விகள் அதிகரித்துள்ளது. தற்போது வரை திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை உறுதிசெய்துள்ளன.
இந்த சூழலில் தான் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கு இடையே பொங்கல் கழித்து நடைபெறும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி அண்மையில் தான் டெல்லி சென்று கட்சி தலைமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.