ஈரோடு இடைத்தேர்தல்; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கண்டனம்
ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் தரக்குறைவாக பேசுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
பழனிசாமிக்கு திமுக கண்டனம்
ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் 3ம் தர நபர்களை போல தரக்குறைவாக பேசி வருவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரோட்டில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்மையில் திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ், அமைச்சர்களை எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாக வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
குட்கா மோசடியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விரைவில் தண்டனை பெற போகிறார்கள் என தெரிவித்தார்.
மேலும், இந்த நிலைக்கு ஆளான அவர்களை வைத்துக்கொண்டுகே கேவலமான ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமி, இன்றைய முதலமைச்சரை குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.
எடப்பாடி பழனிசாமி தரமில்லாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறார் என குற்றசாட்டினார். இதற்கு நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியமில்லை, எங்கள் தொண்டர்கள், பேச்சாளர்கள் பேச ஆரம்பித்தால் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டுக்குள் நடமாட முடியாது, எந்த அளவுக்கு பேசுபவர்கள் உள்ளனர் எனவும் கூறினார்.