‘‘மீண்டும் திமுக ஆட்சி வந்தால் கட்டப்பஞ்சாயத்துதான்’’ : முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து அதிகமாகும் என முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார். மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி அவர், “தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருவதாக கூறிய முதல்வர்.
மதுரை கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் அராஜகமானவர் என்றும் அதிமுக வேட்பாளர் அமைதியான பண்பாளர் என புகாழாரம் சூட்டினார். மேலும், தமிழகம் ஒரு மாநிலம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தியாவிற்கே முன் உதாரணமாக உள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் அனைத்து துறைகளும் இந்திய அளவில் விருதுகளை குவித்து வருகிறது, தமிழகத்தில்மீண்டும் திமுக ஆட்சி வந்தால் கட்டப்பஞ்சாயத்து அதிகமாகும்.
திமுகவினர் அபகரித்த சுமார் 14 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்டுக் கொடுத்தது அதிமுகதான் என முதல்வர் தனது பிரச்சார உரையில் பேசினார்.