'திமுக தான் பச்சை சங்கி'' - ஆத்திரத்தில் காலணியை காட்டிய சீமான்
திமுக தான் பச்சை சங்கி எனக்கூறி ஆத்திரத்தில் காலணியை காட்டிய சீமானின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட காரணதால், தெற்காசிய போட்டிகளில் பங்கேற்க தமிழகம் வந்த இலங்கை அணியை அனுமதிக்கக்கூடாது எனக்கூறி தீக்குளித்து உயிர் நீர்த்த அப்துல் ரபூபின் 26ம் ஆண்டு நினைவு தினம் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் வீர வணக்கம் நாள் சீமான் தலைமையில் நடைபெற்றது.
நினைவு தீபம் ஏற்றி அப்துல் ரபூப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் மேடையில் பேசிய சீமான், நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் மீதான கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் சமீபத்தில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் கைது குறித்து விமர்சனம் செய்த அவர், மாரிதாஸ் கைதுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் என்னை சமூக வலைதளங்களில் தொடர்ந்து சங்கி என கூறி வருகின்றனர்,
ஆனால், மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்குகளில் எந்தவித நடவடிக்கையும் இன்றி அரசு தரப்பு வழக்கறிஞர் நேரில் ஆஜராகி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காததால் அனைத்து வழக்குகளிலிருந்தும் மாரிதாஸ் வெளியே வந்துள்ளார்.
இதன்மூலம் திமுகதான் பச்சை சங்கி என காட்டமாக பேசிய சீமான் ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்து தான் அணிந்திருந்த காலனியை உயர்த்தி காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது