கூட்டணியில் இருந்து விலகிட்டா திமுக தோல்விதான் - காங். மாவட்ட தலைவர்
காங்கிரஸ் கட்சியின் துணை இல்லாமல் திமுக தேர்தலில் வெல்ல முடியாது என காங். மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார்.
திமுகவுடன் கூட்டணி
பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.வி.ஜே.சுரேஷ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், திமுகவினர் காங்கிரஸ் கட்சியை மதித்து நடக்க வேண்டும்.
அதைத்தான் பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் விரும்புகிறோம். காங்கிரஸ் கட்சியின் துணை இல்லாமல் தமிழகத்தில் எந்த கட்சியும் ஆள முடியாது ஆட்சிக்கு வர முடியாது. தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியை நம்பி மக்கள் வாக்களிக்கிறார்கள்.
இதனை காங்கிரஸ் கட்சி பயன்படுத்த வேண்டும். தமிழகத்தின் காங்கிரஸ் கட்சி கால் ஊண்ட வேண்டும், காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும். அப்போதுதான் காமராஜ் ஆட்சியை கொண்டுவர முடியும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலும்,
மாவட்ட தலைவர் பேச்சு
அதிகாரத்திலும் பங்கு பெற வேண்டும், அதிகாரத்தில் இருந்தால் தான் காமராஜர் ஆட்சியை உருவாக்க முடியும். திமுகவிடமிருந்து காங்கிரஸ் கட்சி தங்களது உரிமையை கேட்டு பெற வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
ஆனால் ஆட்சி அதிகாரம் இல்லாத காரணமாக மக்களுக்கான எந்தவிதமான திட்டங்களும் செயல்படுத்த முடியவில்லை. காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வளர்க்க வேண்டும், அதற்கு ஏற்றார் போல் எந்த கட்சியின் கூட்டணி அமைக்க வேண்டுமோ அதற்கு நாங்கள் செல்ல தயாராக உள்ளோம்.
எங்களுக்கு கட்சி தான் முக்கியம். காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டால் அனைத்து தொகுதிகளிலும் திமுக தோல்வி அடையும். திமுக கூட்டணியில் மற்ற கட்சிகள் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் ஒவ்வொரு தேர்தலிலும் உயர்ந்து கொண்டு வருகிறது.
காங்கிரஸ் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டாலும் எங்களது வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.