‘’நீங்க வந்தா மட்டும் போதும்".. மோடியை கிண்டல் செய்யும் திமுக வேட்பாளர்கள்..
பிரதமர் மோடி எங்கள் தொகுதிக்கு வந்து அதிமுக கூட்டணி சார்பாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று திமுக வேட்பாளர்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதமாக திமுக தலைவர்கள் இப்படி அழைப்பு விடுத்து உள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று மதுரை பாண்டி கோவில் பகுதியில் நடைபெற்ற அதிமுக கூட்டணி கட்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.திமுகவை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் பிரதமர் மோடி குற்றச்சாட்டுகளை அடுக்கினார். எதுவும் செய்யாமல் இருந்தாலே அதிமுகவிற்கு கொஞ்சம் வாக்குகள் கிடைக்கும்.
மோடி வந்து பிரச்சாரம் செய்தால் இருக்கிற வாக்குகளும் காலியாகிவிடும் என்று திமுகவினர் இணையத்தில் கிண்டல் செய்கிறார்கள். மோடிவந்து பிரச்சாரம் செய்தால் அதிமுக ஜெயிக்காது. லோக்சபா தேர்தல் நியாபகம் இருக்கா? என்று திமுகவினர் இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்.

அதோடு தமிழக பாஜகவினர் மோடியை முன்னிறுத்துவதற்கு பதிலாக ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை முன்னிறுத்துவதையும் திமுகவினர் குறிப்பிட்டு உள்ளனர். தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதிதான் இந்த டிரெண்டை தொடங்கி வைத்தது. வடமாநிலங்களில் பிரதமர் மோடி வந்து பிரச்சாரம் செய்தால் போதும் பாஜக வெற்றி என்று நம்பிக்கையா உள்ளது .

ஆனால் தமிழகத்தில் திமுகவோ அதை உடைக்கும் வகையில் கோ பேக் மோடிக்கு பதிலாக கம் பேக் மோடி என்று கூறி கிண்டல் செய்து வருகிறது.
தற்போது இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.