திமுக தலைமை சொல்லியும் மதிக்காத ஸ்ரீபெருமந்தூர் பேரூராட்சி தலைவர்

dmk electionissuedmk congressdmk
By Swetha Subash Mar 06, 2022 01:08 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் தன்னுடைய பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை.

மாவட்ட திமுக தலைமை நாடகமாடுவதாக காங்கிரஸ் கட்சியினர் வேதனை ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 6, காங்கிரஸ் 1, அதிமுக 3 சுயேச்சைகள் 4 மற்றும் பாமக 1 வெற்றி பெற்றன.

இதில் தலைவர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால், திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்து திமுகவின் நகர செயலாளர் சதீஸ்குமாரின் மனைவி சாந்தி காங்கிரஸ் உறுப்பினர் செல்வமேரிக்கு எதிராக போட்டியிட்டு 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் உறுப்பினர் செல்வமேரி 4வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இதற்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் அதிருப்தி வெளிப்படு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையை மீறி தோழமைக் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக பொறுப்பை விட்டு விலகி நேரில் வந்து சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இன்னும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக நகர செயலாளர் சதிஷ் குமாரின் மனைவி சாந்தி ராஜினாமா செய்ய வில்லை. இதனால் கூட்டணி கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

திமுகவின் மாவட்ட தலைமை நாடகம் ஆடுவதாகவும் அவர்கள் அறிவுறுத்தலின் பேரிலேயே இது போன்ற செயல் நடைபெற்றதாகவும் காங்கிரஸ் கட்சியினர் இடையே பேசப்பட்டு வருகிறது.

ராஜினாமா விவகாரம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை அறிவுறுத்தலின் பேரில் காங்கிரஸ் கட்சியினர் சிலரும் திமுக நகர செயலாளர் சதீஷ் இடம் கேட்டபோது மழுப்பலான பதிலே அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் இடையே கடும் அதிருப்தி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.