பாஜகவின் முக்கிய புள்ளிகளை எதிர்க்கும் திமுக வேட்பாளர்கள் இவர்கள்தான்

dmk bjp list candidate
By Jon Mar 14, 2021 02:58 PM GMT
Report

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய கட்சியான பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. பாஜகவுக்கு அதிமுக 20 தொகுதிகளை கொடுத்தது. அந்த 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்ந்தேடுப்பதற்குள் பாஜக திணறி விட்டது. தற்போது பாஜக மற்றும் திமுக 14 தொகுதிகளில் நெருக்கு நேர் மோதுகிறது.

தமிழக பாஜகவின் முக்கிய புள்ளிகளை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம். தாராபுரம் தொகுதியில் எல்.முருகனை எதிர்த்து திமுக சார்பில் கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார். அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலையை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.இளங்கோ போட்டியிடுகிறார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை எதிர்த்து திமுக சார்பில் டாக்டர் எழிலனும் நாகர்கோவில் தொகுதியில் காந்தியை எதிர்த்து சுரேஷ் ராஜனும் போட்டியிடுகிறார்கள். கோவை தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசனை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசனும் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமாரும் போட்டியிடுகிறார்கள். மேலும், காரைக்குடி தொகுதியில் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் எஸ். மாங்குடி போட்டியிடுகிறார்.