தமிழகத்தில் 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! எந்த தொகுதியில்? யார் தெரியுமா?

1 week ago

திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களை பிடித்து ஆட்சியமைக்கிறது.

இதில் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க செய்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

அதாவது, 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார, இதுவே இத்தேர்தலில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்திலான வெற்றி ஆகும்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்