இது தாங்க கடைசி! கதறி அழும் திமுக வேட்பாளர்- வைரலாகும் வீடியோ காட்சிகள்

election dmk Viralimalai palaniappan
By Jon Apr 03, 2021 12:34 PM GMT
Report

உங்களுக்காக உழைக்க எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள் என விராலிமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான தென்னலூர் பழனியப்பன் கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது. நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையவுள்ள நிலையில், ஒவ்வொரு வேட்பாளரும் வித்தியாசமான யுக்திகளை கையாண்டு மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

பல தொகுதிகளில் அதிமுக- திமுக இடையே நேரடி மோதல் இருப்பதால், யார் யார் ஜெயிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான தென்னலூர் பழனியப்பன் கதறி அழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

அதில், 30 ஆண்டு காலம் அரசியலில் பயணித்துக் கொண்டிருக்கும் எனக்கு கடைசி ஒரு வாய்ப்பாக தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தேர்தலை நான் இறுதித் தேர்தலாகவே கருதுகிறேன், உங்களுக்காக உழைப்பதற்கு எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். நான் எதற்கும் ஆசைப்பட்டதில்லை, பொது வாழ்க்கையில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்க மாட்டேன்.

உங்களுக்காக உழைப்பதை பெருமையாகக் கருதுகிற உங்களின் சகோதரன் பழனிப்பனுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் என உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். என்னை கைவிட்டுவிடாதீர்கள் கூறியபடியே அழுகிறார். இவரை எதிர்த்து அத்தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.