திமுக வேட்பாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி
கடலூர் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மக்கள் கொரோனா விதிமுறைகளை கடுமையான பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபநாட்களாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. தற்போது கடலூர் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளரான எம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கு தொற்று உறுதியானதால் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக மக்கள் நீதி மய்யத்தின் வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்தோஷ்பாபு, அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜ், சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், சோழிங்கநல்லூர் தி.மு.க. வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், காரைக்கால் அதிமுக வேட்பாளர் அசனா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதிஷ்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.