சென்னையில் திமுகவை சேர்ந்த கல்லூரி மாணவி வெற்றி
நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் சென்னை மாநகராட்சி 136-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட கல்லூரி மாணவி வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது வெற்றி பெற்ற வேட்பாளர்கள் குறித்த தகவலை உடனுக்குடன் அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திமுகவைச் சேர்ந்த கல்லூரி மாணவி நிலவரசி துரைராஜ் 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் வார்டில் வெற்றி பெற்றுள்ளார்.
தனது தந்தை 35 வருட காலமாக அரசியலில் இருப்பதாகவும், மேலும் தமிழக முதல்வரை முன் உதாரணமாகக் கொண்டு, தாம் அரசியலில் களம் காணுவதாக தெரிவித்தார்.
மேலும் தனது வார்டுக்குட்பட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என தெரிவித்து பிரச்சாரம் செய்த நிலவரசி வெற்றி பெற்றுள்ளார்.