வத்திராயிருப்பு திமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம் , தேர்தல் நிறுத்தபடுமா?

dmkcandidate dieheartattack
By Irumporai Feb 14, 2022 04:10 AM GMT
Report

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி அரசியல் கட்சி மற்றும் சுயேட்டை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பேரூராட்சியில் 18 வார்டுகளை கொண்டது.இந்த பேரூராட்சியில் 14 ஆயிரத்து 348 வாக்காளர்கள் உள்ளன.

 இந்த பேரூராட்சி 2வது வார்டில் திமுக சார்பில் கனி (எ) முத்தையாவும், அதிமுக சார்பில் கருப்பையாவும் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில் திமுக வேட்பாளர் முத்தையா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று மாலையும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

வத்திராயிருப்பு திமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம் ,  தேர்தல் நிறுத்தபடுமா? | Dmk Candidate Dies Of Heart Attack In Watrap

அப்போது முத்தையாவிற்கு நல்லிரவு ஒரு மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.பின்னர் அவரை உறவினர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துமனை கொண்டு சென்ற நிலையில் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் கனி (எ) முத்தையா உயிரிழந்தார்.

இந்த சம்பவம் திமுக அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வத்திராயிருப்பு பேரூராட்சி 2 வது வார்டு திமுக வேட்பாளர் உயிரிழந்ததன் காரணமாக அந்த வார்டில் தேர்தல் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.