காத்திருக்கும் பெரும் சவால் - தமிழகத்திற்கு பிரஷாந்த் கிஷோரை கூட்டி வரும் திமுக?
வரும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் பெரும் சிக்கலான ஒன்றாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
2026 சட்டமன்ற தேர்தல்
முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 2026 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. இப்போதிலிருந்தே தேர்தல் பணிகளை மெல்ல துவங்கிவிட்டன கட்சிகள்.
மக்களவை தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4-ஆம் தேதி வெளிவர இருக்கிறது.
அதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமடையாலாம். தமிழகத்தை பொறுத்தவரை தற்போதைய சூழலில், திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக - பாமக கூட்டணி, நாம் தமிழர் கட்சி போன்றவற்றுடன் சேர்த்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் போட்டிக்கு வருகின்றது.
திமுகவிற்கு மீண்டும் ஆட்சியை பிடிக்க பெரும் சவால்கள் உள்ளன. இந்த இக்கட்டான நிலையை கையாள திமுக தரப்பில் அரசியல் தேர்தல் வியூகர் பிரஷாந்த் கிஷோர் தேர்தல் பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.