திருப்பத்தூர்: அதிமுக எம்.எல்.ஏவை விரட்டியடித்த திமுகவினர்
தமிழகம் முழுவதும் ரேசன் அட்டை உள்ள குடும்பங்களுக்கு ரூ.4000 உதவித்தொகை அறிவிக்கப்பட்டு, அதன் முதல் தவணை ரூ.2000 இந்த மாதமே வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த செந்தில் குமார் உள்ளார்.
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட. பழைய வாணியம்பாடி தேவஸ்தானம் வள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் நியாயவிலைக் கடைகளில் தமிழக அரசு வழங்கும் கொரோனா நிவாரண நிதி ரூபாய் 2000 வழங்கும் திட்டத்தினை வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் இன்று வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புல்லூர், திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் நியாய விலை கடைகளில் நிவாரண நிதி வழங்க சென்ற போது திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகப்பன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த ராமசாமி உள்ளிட்ட திமுகவினர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்றும் பாராமல் நிவாரண நிதி வழங்க கூடாது என்று தடுத்து அவரை விரட்டினர்.