’உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகிறார்’ - திமுகவின் அமைச்சரவை பட்டியல் தயாரா?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தனிப்பெரும்பான்மை உடன் திமுக ஆட்சி அமைக்கிறது. 

மே 7-ம் தேதி எளிமையான முறையில் ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும் போதே திமுக அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. இந்நிலையில் திமுகவின் உத்தேச அமைச்சரவை பட்டியல் ஒன்று இணையத்தில் உலவி வருகிறது.

அதில் முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் உள்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளை தன் வசம் வைத்துக் கொள்வார் எனக் கூறப்படுகிறது.

திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் பொதுப்பணித்துறை மற்றும் சிறைத்துறை ஆகியவைகளை வைத்திருப்பார் என்றுள்ளது.

அதில் மா.சுப்ரமணியம் சபாநாயகர் ஆக உள்ளார் எனத் தெரிகிறது. மேலும் உதயநிதி ஸ்டாலினும் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்றும் ஊரக வளர்ச்சி துறை பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்