வாயை திறங்க சி.எம்..... சட்டப்பேரவைக்குள் கருப்பு பேட்ஜுடன் வந்த உதயநிதி
விஜய் முதல்வர் பதவிக்கு சென்ற பின்பு முதல் சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், திமுக அமைச்சர்கள் கருப்பு பேட்ஜுடன் வந்த சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜய்
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக கட்சி தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளை வென்ற நிலையில், சில கட்சிகளை கூட்டணியாக வைத்து முதல்வர் பதவியில் விஜய் அமர்ந்துள்ளார்.
ஆனால் பதவியேற்ற நாளில் இருந்து தமிழகத்தில் அடுத்தடுத்து பல குற்றசம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. இதற்கு விஜய் தரப்பிலிருந்து சரியான பதில் வரவில்லை.

விஜய் முதல்வராக பதவியேற்ற பின்பு இன்று முதல் சட்டசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. காலை சரியாக 9.59க்கு சட்டப்பேரவையில் முதல்வர் அமர்ந்த நிலையில், பின்பு சபாநாயகர், ஆளுநர் வருகை தந்தனர்.
தற்போது எதிர்கட்சியாக இருக்கும் திமுக-வைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் முதல்வருக்கு எதிராக கருப்பு நிற பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்குள் வந்துள்ளனர்.
வாயை திறங்க சி.எம் என்ற கருப்பு நிற பேட்ஜ் அணிந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர். ஏனெனில் சட்டசபையில் முதல்வர் இதுவரை வாய்திறந்து எந்தவொரு பேச்சும் பேசியதில்லை. இதனால் இவ்வாறான வேலையில் எதிர்கட்சிகள் இறங்கியுள்ளனர்.
இவ்வாறு கருப்பு நிற பேட்ஜ் மட்டுமின்றி, கதறல் கேட்குதா? திரையில் ஹீரோ தரையில் ஜீரோ, திரையில் நாயகன் தரையில் வில்லன் என பல வசன பலகைகளை கையில் வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.