திமுக எம்பிக்கள் டெல்லியில் பிச்சை எடுக்கிறார்கள் : முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சிவி சண்முகம்
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , இதில் கலந்துகொண்டு பேசிய சிவி சண்முகம் மத்திய பாஜக அரசு சொல்லுகின்ற பணிகளை வாயை மூடி தன் தலையில் தூக்கிவைத்து திமுக ஸ்டாலின் அரசு செய்து வருகிறது.
குறிப்பாக என்எல்சி விவகாரத்தில் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி லாபம் ஈட்டுவதாக நிலங்களை உடனே கையபடுத்த மத்திய அரசு உத்திரவிட்டுள்ள நிலையில், அதனை தமிழக அரசு செய்து வருகிறது.

திமுக எம்பிக்கள் பிச்சை எடுக்கிறார்கள்
தமிழகத்தில் மத்திய அரசை விமர்சித்து பேசுகிறார்கள். ஆனால் டெல்லி சென்றால் மத்திய அரசிடம் அய்யா அம்மா தாயே என கெஞ்சுகிறார்கள். 39 எம்.பி களும் பிச்சை எடுகிறார்கள்.
மத்திய அமைச்சர்களிடம் கெஞ்சுவது தான் திமுகவின் சமுகநீதி. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக - பாஜக கூட்டணி வர உள்ளது. திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் ஓட போகிறார்கள். இவ்வாறு கூறினார்.