தினம் ஒருவரை அடிக்கணும் என்று திமுக அமைச்சர்கள் சபதம் எடுத்துவிட்டார்கள் : அண்ணாமலை கிண்டல்
திமுக அமைச்சர்கள் தொண்டர்களையும் மக்களையும் அடிப்பதாக சபதம் எடுத்தது போல் தெரிவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் அடி நிகழ்வு
கடந்த சில நாட்களாகவே திமுக அமைச்சர்களின் நிகழ்வானது பேசு பொருளாகியுள்ளது. குறிப்பாக முதலமைச்சரின் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ஆய்வு சென்ற அமைச்சர் நாசர் அங்கிருந்த தொண்டர் ஒருவரை மண்கட்டியால் அடித்தது இணையத்தில் வைரலானது.
அதே போல் சேலம் மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்ட நிகழ்வில் சால்வை போத்த வந்த தொண்டரை அமைச்சர் கே.என் நேரு அவரின் தலையில் ஓங்கி அடித்து சட்டையை பிடித்து தள்ளினார்.
அப்போதும் ஆத்திரம் தீராமல் பின்பக்கமாக கழுத்தை பிடித்து அங்கிருந்து தள்ளினார், இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில்
மக்களை அடிக்கும் திமுக அமைச்சர்கள்
தினம் ஒருவரை அடிக்கிறோம் என்று திமுக அமைச்சர்கள் மக்களையும் தொண்டர்களையும் அடிப்பதாக சபதம் எடுத்தது போல் தெரிகிறது. சில நாட்களுக்கு முன் ஒரு அமைச்சர் கற்களை வீசி எறிந்தார்.
இப்போது இன்னொரு அமைச்சர் ஆவேசமாக அடித்து தள்ளுகிறார். அதனால் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். எங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.