ஜெயலலிதா மரணம் குறித்து பேச திமுகவுக்கு தடை விதிக்க வேண்டும் - அதிமுக கோரிக்கை
election
dead
dmk
aiadmk
jayalalithaa
By Jon
ஜெயலலிதா மரணம் குறித்து பேச திமுகவுக்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மனு அளித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினும்,இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து பேசுவதற்கு தடை விதிக்க அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இருவரும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக, மறைந்த தலைவர்களின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் விசாரித்து வரும் நிலையில் அதை விமர்சிக்கும் வகையில் இருவரும் பேசி வருவதால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.