ஓபிஎஸ் மகன் கார் மீது திமுகவினர் கல்வீசித் தாக்குதல்

attack dmk panneerselvam Raveendranath Kumar
By Jon Apr 06, 2021 01:29 PM GMT
Report

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பியுமானவர் ரவீந்திரநாத்குமார். இவரது காரை போடிநாயக்கனூரில் 20க்கும் மேற்பட்ட திமுகவினர் தாக்கி அடித்து உடைத்துள்ளனர். சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுகவில் இருந்து அமமுக சென்று அங்கிருந்து திமுக சென்ற தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

இதனால் இருவருக்குள்ளும் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் போடிநாயக்கனூரி ரவீர்ந்திரநாத்குமாரின் கார் உடைக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

ஓபிஎஸ் மகன் கார் மீது திமுகவினர் கல்வீசித் தாக்குதல் | Dmk Attack Ops Son Car

துணைமுதல்வரின் மகன் கார் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் 20 பேர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.