திமுக - மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம்; எத்தனை தொகுதிகள்?
Marumalarchi Dravida Munnetra Kazhagam
M K Stalin
Vaiko
DMK
By Karthikraja
திமுக - மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
திமுக - மதிமுக தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக திமுக அதன் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கடந்த வாரம் காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை இறுதி செய்த திமுக 28 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை பதவியும் ஒதுக்கீடு செய்தது.

இன்று, அண்ணா அறிவாலயத்தில் வைத்து, திமுக - மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மதிமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும், 3 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட உள்ளது.