திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்: வாக்களித்த பின் ப.சிதம்பரம் பேட்டி

alliance dmk vote Chidambaram
By Jon Apr 06, 2021 02:18 PM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கி இன்று இரவு 7 மணிவரை நடைபெறுகிறது, பெரும்பாலான தொகுதிகளில் மக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர். காலையிலேயே நடிகர் ரஜினிகாந்த், நடிகர் அஜித், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உட்பட பல பிரபலங்கள் தங்களது வாக்கினை செலுத்தினர்.

இந்நிலையில் காரைக்குடியில் தன்னுடைய வாக்கினை செலுத்தினார் முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.