திமுக கூட்டணி உடையும்.. ஒரு கட்சி பாஜகவுடன் பேச்சில் உள்ளது - ஒரே போடுபோட்ட எல் முருகன்

Tamil nadu DMK BJP
By Sumathi Jun 11, 2025 08:30 AM GMT
Report

விரைவில் திமுக கூட்டணி உடையும் என எல் முருகன் தெரிவித்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.

திமுக கூட்டணி உடையும் 

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், "பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான நிர்வாகத்தில் 11 வருட ஆட்சியை நிறைவு செய்து 12 ஆம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம்.

l murugan

ராகுல் காந்தி கண்ணை கட்டி கொண்டுள்ளார். அவர் கண்களை திறந்து பார்க்க வேண்டும். அவர்களின் ஆட்சியில் நாடு எப்படி ஊழலால் சீர்கெட்டிருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். இண்டி கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று திருமாவுக்கு நன்கு தெரியும்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தா அழிவுதான்; அதிமுகவுக்கும் அந்த நிலைதான் - ஜோதிமணி

பாஜகவுடன் கூட்டணி வைத்தா அழிவுதான்; அதிமுகவுக்கும் அந்த நிலைதான் - ஜோதிமணி

 

எல் முருகன் தகவல்

அதனால் தான் அவர் தடுமாற்றத்துடன் பேசுகிறார். திமுக கூட்டணி உடையும். திமுக கூட்டணியில் இருந்து கூட பல கட்சிகள் வெளியே வருவதற்கான வாய்ப்பு உள்ளது. கூட்டணியில் நிலைத்தன்மை உள்ளது. செப்டம்பர் மாதத்துக்குள் எல்லாம் முடிவாகிவிடும். அங்கிருந்து எங்கள் கூட்டணிக்கு வர ஒருவர் தயாராக உள்ளார்.

திமுக கூட்டணி உடையும்.. ஒரு கட்சி பாஜகவுடன் பேச்சில் உள்ளது - ஒரே போடுபோட்ட எல் முருகன் | Dmk Alliance Soon Join Nda Alliance Says L Murugan

நாங்கள் அவரிடம் பேசிவிட்டோம். பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணி குறித்து எல்லாரும் தான் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அது யார் என்று நீங்களே கூட அனுமானிக்கலாம். ஆனால் அரசியலில் எல்லாவற்றையும் உடனடியாக சொன்னால் எதிர்பார்ப்பு இருக்காது.

திமுக கூட்டணியில் உள்ள என் சகோதரர் தான் எங்கள் கூட்டணிக்கு வரவுள்ளார். கூட்டணியை பொறுத்தவரை எது வேண்டுமானாலும் நடக்கலாம். பேசியுள்ளோம். விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் ஏற்கனவே எங்களுடன் கூட்டணியில் இருந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.