ஆளுநர் மாளிகை முன்பு இன்று திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்
ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் இன்று ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் .
ஆளுநர் சர்ச்சை
தொடர்ந்து சர்ச்சையாக பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. இந்த போராட்டம் மட்டுமல்லாமல், விரைவில் குடியரசுத் தலைவரை சந்தித்து ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளது.
திமுக போராட்டம்
இதில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக தலைவர் வைகோ, கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், கூட்டணி கட்சிகளை சேர்ந்த காஜர்மைதீன், விசிக தலைவர் திருமாவளவன், வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் என 11 கூட்டணி கட்சி தலைவர்கள் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னதாக, கூடங்குளம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களுக்கு அந்நிய நாட்டில் இருந்து பணம் வந்ததாகவும் குற்றம் சாட்டினார். இந்த சர்ச்சை கருத்துக்களுக்கு தற்போது தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.